𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

11 تغريدة 3 قراءة Mar 11, 2023
கார்டெலியா குரூஸ்
இந்தியாவின் பிரம்மாண்டமான சொகுசு கப்பல் கார்டெலியா இன்று முதல் இந்தியப் பெருங்கடலில் சுற்ற கிளம்பி விட்டது. 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில்
கலையரங்கம், 10 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் நிறைந்துள்ளன. ஒரே நேரத்தில் 1500 முதல் 2000 பயணிகள், மற்றும் 800
ஊழியர்களை இந்த கப்பல் சுமந்து செல்லவுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை
திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும்
கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும். இது பேசிக் கட்டணம் தான் தங்கும் அறைகளை பொறுத்து கட்டணம் அதிகமாகும். இந்த சொகுசு கப்பலில் INTERIOR
OCEAN VIEW
MINI SUITE,
SUITE
THE CHAIRMAN’S SUITE என ஐந்து வகையான தங்கும் அறைகள் உள்ளன.
நீங்கள் கப்பலில் உள்ளே செல்லும் முன் ஏர்போர்ட்டில் உள்ளது போல் 2 இடத்தில் உங்களை செக் செய்து உள்ளே அனுப்புவார்கள் உள்ளே செல்லும்போது உங்களுக்கு ஒரு சிப் இருக்கும் ஏடிஎம் கார்டு போன்று ஒரு கார்டு தருவார்கள் அதில்தான் கப்பலை நீங்கள் வலம் வருவதற்கான அனுமதி மற்றும் அறைக்கான சாவி
உட்பட்டு இருக்கும் அதை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் வெளியிலிருந்து மது, போதைப்பொருள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இங்கு தரப்படும் சாப்பாடு எல்லாம் உலகத்தரம். சவுத் இந்தியன் உணவு வகைகளும் உண்டு. அதிகாலை கப்பலின் மேற்புறம் சூரிய உதயம் கண்டிப்பாக காண வேண்டிய ஒன்று
இந்தக் கப்பல் பயணத்தை தமிழக சுற்றுலா துறை கார்டெலியா க்ரூஸ் என்ற சொகுசுக் கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்த வருடம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் மட்டுமே சென்னையை சுற்றியிருக்கும். அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மார்ச் ஆகிய
மாதங்களில் அரபிக்கடலில் கோவா மும்பை லட்சத்தீவு கொச்சி ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும். அதனால் நம் அருகே உள்ள இந்த வசதியை இந்த நான்கு மாதங்களுக்குள் அனுபவித்துக் கொள்ளுங்கள்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்
தமிழகத்தில் முக்கியமான ட்ராவல்ஸ் நிறுவனங்களில் புக் செய்து கொள்ளலாம்.
கப்பலின் அதிகாரப்பூர்வ புக்கிங் இந்த இணையதளத்தில் செய்யலாம்
cordeliacruises.com
போன் நம்பர்:
02268811111
வாட்ஸப் நம்பர்
+917738850000
கப்பலில் நீங்கள் வேறு எந்த ஊருக்கும் செல்ல விரும்பவில்லை என்றாலும் அதற்கும் வழி உண்டு 2 நாள் பயணமாக சென்னையிலிருந்து கிளம்பி நடுக்கடலுக்கு சென்று அங்கேயே தங்கி விடும் கப்பல், பிறகு அடுத்த நாள் கிளம்பி சென்னை வந்து விடும் அதற்கு முப்பத்தி எட்டு ஆயிரம் ரூபாய் இரண்டு நபர்களுக்கு

جاري تحميل الاقتراحات...