𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

13 تغريدة Mar 11, 2023
கேதார்நாத் கோயில்
இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக இமய மலையின் எல்லையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கடல்மட்டத்திலிருந்து 3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான மந்தாகினி ஆறு
இக்கோயிலுக்கு அருகிலேயே ஓடுகிறது. இத்தலத்தில் சிவன் வேறு எந்த தலத்திலும் இல்லாதவாரு முற்றிலும் மாறுபட்டதாக பாறையில் ஒரு முக்கோண வடிவில் காட்சி தருகிறார்.
கடந்த 2 வருடங்களாக கொரோனாவால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடந்த மே 6-ம் தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கேதார்நாத் கோயிலானது ஒரு செவ்வக வடிவிலான மேடைத்தளத்தின்மீது அழகாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. கருவறைக்கு செல்லும் பாதையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல கல்வெட்டுக்குறிப்புகளையும் காண முடிகிறது.
கோடைக்காலத்தின் 6 மாதங்களில் மட்டுமே இக்கோயிலுக்கு பக்தர்களும் யாத்ரீகர்களும் விஜயம் செய்ய முடியும். குளிர்காலத்தில் கேதார்நாத் தெய்வத்தின் பூஜை ஸ்தலமும் உக்கிமத் எனும் இடத்துக்கு மாற்றப்படுகிறது.
கேதார்நாத்துக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் ஆதி குரு சங்கராச்சாரியாரின்
சமாதி ஸ்தலத்தையும் பார்க்கலாம். சோன்பிரயாக் எனும் இடம் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் 1829 மீ உயரத்தில் அமைந்துல்ளது
இது மந்தாகினி ஆறும் பாசுகி ஆறும் சங்கமிக்கும் இடமாகும். வாசுகி தல் எனப்படும் பிரசித்தமான ஏரியின் பெயரால் அழைக்கப்படும் மற்றொரு முக்கியமான இடம்
கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இது கேதார்நாத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியை சுற்றிலும் பிரம்மாண்டமாக இமயமலைதொடர்கள் எழும்பி நிற்பது பிரமிக்க காட்சியாகும். சௌகம்பா சிகரமும் இந்த ஏரிக்கு அருகிலேயே உள்ளது.
ரடஸ் குந்த் : கேதார்நாத் கோவிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய நீர் குன்று இது.
1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கேதார்நாத் காட்டுயிர் சரணாலயம் அலக்நந்தா ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கிறது. இது 967 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இந்த சரணாலய வனப்பகுதி
பெரும்பாலும் ஓக், பிர்ச், புக்யால் மற்றும் அல்பைன் மரங்களை கொண்டுள்ளது. பலவிதமான உயிரினங்களும் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. காட்டுப்பூனைகள், கோரல்கள், நரி, கருங்கரடி, பனிச்சிறுத்தை, சாம்பார் மான், தாஹிர் ஆடு மற்றும் கேதார்நாத் கஸ்தூரி மான் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
கடல் மட்டத்திலிருந்து 1982 மீ உயரத்தில் கௌரிகுண்ட் எனும் மற்றொரு பிரசித்தமான யாத்ரீக ஸ்தலமும் கேதார்நாத்துக்கு அருகில் உள்ளது. இங்கு பார்வதி தேவிக்கான புராதனமான கோயில் அமைந்துள்ளது.
கேதார்நாத் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். உங்கள் பயணம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய
பயண அட்டை வழங்கப்படும்.கேதார்நாத்துக்கு அருகில் 239 கி.மீ தூரத்திலேயே டேராடூன் நகரின் ஜோலி கிராண்ட் விமான நிலையம் உள்ளது. ரயில் மூலம் கேதார்நாத் வரவிரும்பும் யாத்ரீகர்கள் ரிஷிகேஷ் ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
யாத்ரீகர்கள் முன்னதாகவே ஹெலிகாப்டர் பயணத்திற்காக பதிவு செய்து கொள்ளலாம். கௌரிகுண்டில் இருந்து கேதார்நாத் சன்னதி வரைக்கும் 16 கி.மீ நடைபயணம் செய்ய வேண்டும் என்பதால், 15 நிமிடங்களுக்குள் பக்தர்களை இந்த ஹெலிகாப்டர் மூலம் அந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல இந்த சேவை இயக்கப்படுகிறது
டிப்ஸ்: நீங்கள் கேதர்நாத் போக வேண்டுமென்று ஆசைப்பட்டால் கண்டிப்பாக முன்னதாக பதினைந்து நாள் டெய்லி 5 கிலோமீட்டர் வாக்கிங் போகி பழகிக்கொள்ளுங்கள்
கேதார்நாத் செல்ல முன்பதிவு இணையதள முகவரி badrinath-kedarnath.gov.in
ஹெலிகாப்டர் முன்பதிவு இணையதள முகவரி
heliservices.uk.gov.in

جاري تحميل الاقتراحات...