K.Annamalai
K.Annamalai

@annamalai_k

4 تغريدة Dec 24, 2022
இந்த @arivalayam அரசின் மக்கள் விரோத போக்கை முறியடிக்கக் கோட்டையை நோக்கிய நமது பயணத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெள்ளமாகத் திரண்டு வந்த நம் கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் @BJP4TamilNadu சார்பாக எங்களது நன்றிகள். (1/n)
வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றியைப் பெற்றுவிட்டு இன்று வீணாகச் சப்பை கட்டுக் கட்டுவதை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பெட்ரோல் விலையை 2₹, டீசல் விலையை 4₹ மற்றும் சமையல் எரிவாயு சிலின்டருக்கு 100₹ மானியம் ஆகிய தேர்தல் வாக்குறுதியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். (2/n)
நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஒரு வருடத்திற்குள் பெட்ரோல் விலையை 14.5 ரூபாயும் டீசல் விலையை 17 ரூபாயும் குறைத்துள்ளது.
இதன் பின்னும் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 25ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும்…(3/n)
…ஒரு நாள் சத்தியாகிரக போராட்டத்தில் @BJP4TamilNaduவின் அனைத்து தொண்டர்களும் ஈடுபடுவர்.
அதற்குப் பின் திருச்சியில் மாபெரும் போராட்டத்தில் எங்களது தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பர்.
இந்த மாபெரும் போராட்டம் திமுகவின் முடிவுரைக்கு ஆரம்பமாக இருக்கும். (4/n)

جاري تحميل الاقتراحات...