𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

6 تغريدة Mar 11, 2023
குட்டி மாலத்தீவு
நீரின் நடுவே மிதக்கும் தங்கும் விடுதிகள் மட்டும்தான் இல்லை மற்றபடி குறைந்த அலை, நீலமும், பச்சையும் நிறமும் கலந்த கடல், கடற்கரையில் தென்னைமரங்கள் என அப்படியே அச்சு அசல் மாலத்தீவை நினைவுபடுத்துகிறது இந்த லெமூர் பீச்.
உண்மையில் இந்த
கடற்கரைக்கு
#lemurbeach
வரும் மக்கள் மனநிம்மதி பெற்று செல்கிறார்கள் என்றால் அது
மிகையாகாது. அந்த அளவுக்கு மன அமைதி தரும் கடற்கரை.
கன்னியாகுமரியில் இருந்து 32 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து
14 கிமீ தொலைவிலும்
அமைந்துள்ளது "லெமூர் கடற்கரை". நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில்
இராஜக்கமங்கலம் பகுதியை அடுத்த
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது.
கணபதிபுரம் ஜங்ஷனில் இருந்து தெற்கே செல்லும் சாலையில் ஏறத்தாழ ஒரு கிமீ தொலையில் சென்றால், லெமூர் கடற்கரையை அடையலாம். செல்லும் வழி இருபுறமும் தென்னைமரங்கள் உங்களை வரவேற்று
செல்லும் காட்சியை அழகாக ரசிக்கலாம்.குமரி மாவட்டத்தின் நீண்ட, அகலமான கடற்கரையாக "லெமூர் கடற்கரை" உள்ளது. கடற்கரையில் அமர்ந்து கடல் அலையை ரசிக்கும் போது, உங்கள் உள்ளத்திற்குள் ஒரு பரவசநிலை ஏற்படுவதை உணரலாம். மன அமைதி, புதிய இடங்களை தேடி செல்பவர்கள்
மட்டுமல்லாது, அனைத்து மக்களும்
சென்றுவர, மனதை கொள்ளைகொள்ளும் அழகிய, சுத்தமான கடற்கரை "லெமூர் கடற்கரை". இந்த கடற்கரைக்கு "ஆயிரம்கால் பொழிமுகம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. இங்கு சொந்த வாகனத்தில் செல்வது நல்லது பஸ்ஸில் செல்வதற்கு கணபதிபுரம் வரை மட்டுமே பஸ் உண்டு அதற்கு மேல் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்
இங்கு குளிக்க, மது அருந்த அனுமதி கிடையாது.
லொகேஷன்:
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...