Saran Modi🇮🇳🚩
Saran Modi🇮🇳🚩

@SaranModi7

14 تغريدة 22 قراءة Jan 02, 2022
தி.மு.கவில் வெடித்தது அதிகார சண்டை … உதயநிதி ஸ்டாலின் VS கனிமொழி..! திசை திரும்பும் தி.மு.க!
தி.மு.க அமைச்சர்கள் கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெறுகிறது. மேலும் திமுகவிற்கு புது ரத்தம் பாச்ச வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது,அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற வேண்டும் என அன்பில் மகேஷ் மற்றும் மற்ற அமைச்சர்கள் கூறியது என அடுத்த முதல்வர் அவர்தான் என்ற நிலைக்கு உதயநிதியை,
அடுத்த திமுகவின் தலைமைக்கு மட்டுமல்ல தமிழகத்தின் தலைமைக்கும் தயார்ப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் எதிர்காலத்தில் தனக்கு போட்டியாக அத்தை வந்துவிடக்கூடாது என கனிமொழியை ஒதுக்க நினைக்கிறாராம் உதயநிதி.கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.க்கும், அமைச்சர் கீதா ஜீவனுக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனத்திற்கே தொடர்புகொண்ட அமைச்சர்,‘எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை.கனிமொழி மேடம் எனக்கு உதவியாகத்தான் இருக்கிறார்’ என்று,
சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் அமைச்சர் கீதா ஜீவனுக்கும், கனிமொழிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த ‘மேல் மட்டத்தில்’சதி நடப்பதாக பேசப்பட்டது.இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை உ.பி.க்களிடமும்,அறிவாலயத்தில் மூத்த தலைவர்களிடமும் பேசியபோது நமக்கு கிடைத்த தகவல்கள்,
அதிர்ச்சி ரகம். ‘‘தலைவர் கலைஞர் இருக்கும் போது, கனிமொழிக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கலைஞரின் மறைவிற்கு பிறகு கனிமொழியை தூத்துக்குடி எம்.பி.யாக்கி அழகு பார்த்தார், அண்ணன் மு.க.ஸ்டாலின்.. மேலும் அதிமுக ஆட்சியில் பெண்கள் மீது வன்கொடுமை நடந்தால்,
கருப்பு துணி கட்டி கொண்டு தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தார். இதுவும் திமுகவின் வெற்றிக்கு துணைபுரிந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு பிறகு கனிமொழி காணவில்லை என்பது வேறு கதை.உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் திமுகவில்,
பெண்களுக்கு என தனி பேரவை ஆரம்பிக்க திட்டமிட்டார் கனிமொழி. அனால் அதை தான் கொண்டுவந்தது போல் வெளியிட்டார் உதயநிதி . அப்போதிலிருந்தே கனிமொழிக்கும் உதயநிதிக்கும் பனிப்போர் ஆரம்பித்தது. மேலும் அரசியலுக்கு இப்போது வந்த உதயநிதியை அரசியலில் மட்டுமல்ல,
ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு கனிமொழி முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும் இதன் தொடர்ச்சியாக தான் பெண்கள் பேரவை மகளிர் அணியை பலமாக்க புது முயற்சிகள் எடுக்கப்படும் என கனிமொழி அறிவித்துள்ளார்.இந்த நிலையில்தான் கீதா ஜீவனுக்கும்,கனிமொழிக்கும் MPக்கும் மோதல்,
என்ற செய்திகளை கசியவிட்டுள்ளனர்.தொடர்ந்து இந்த செய்திகள் பல்வேறு பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சிலர் இருப்பதாகவும், மூத்த தி.மு.க. நிர்வாகிகளே கிசுகிசுக்கின்றனர்’’என்றார்.நீங்கள் சொல்வது உண்மையா..?
எதற்காக கனிமொழிக்கு எதிராக உதயநிதி உள்குத்து அரசியலில் ஈடுபடவேண்டும் என்றோம், ‘‘சமீப நாட்களாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும், துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர்.ஆனால், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோருக்கு இதில்,
துளியளவும் விருப்பம் இல்லையாம். இந்த நிலையில்தான், கனிமொழிக்கு எதிரான உள்குத்து வேலையில் கீதா ஜீவனை வைத்து உதயநிதி தரப்பில் சிலர் இறங்கி இருக்கிறார்கள்.மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார் கனிமொழி. இந்த நிலையில்தான் எதிர்காலத்தில் தனக்கு போட்டியாக அத்தை வந்துவிடக்கூடாது.
என கனிமொழியை ஒதுக்க நினைக்கிறார் உதயநிதி என்று தூத்துக்குடி திமுகவினர் கூறுகின்றனர்.
ஒரே தேசம் செய்திகள்
@oredesam

جاري تحميل الاقتراحات...