𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

11 تغريدة 13 قراءة Mar 11, 2023
பர்வத மலை
ஆன்மீக தலங்களுக்கு நடைபயணமாக செல்வது பண்டைய தமிழர்கள் காலத்திலிருந்தே உண்டு. அதற்கு பாதி ஆன்மிக காரணம் இருந்தாலும் பாதி தன் உடல்நிலையை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் தமிழர்கள் காட்டிய அக்கறையே காரணம். அவ்வாறு நிறைய மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் அதில் 3 முக்கியமான மிகவும்
கடினமான பாதை ஆகும் அதில் வெள்ளியங்கிரி, சதுரகிரி மிகவும் முக்கியமானதாகும் அதற்கு அடுத்த முக்கியமான இடம் தான் இந்த பருவதமலை.
பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம்,
திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு. இந்த மலையின் உச்சியில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் மிகவும் பிரபலமானது இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பர்வத மலை திருவண்ணாமலையில் இருந்து 37 KMம்,
போளூர்ல் இருந்து 20 KM தொலைவில் உள்ளது. மலை ஏற மூன்று வழிகள் உள்ளன. ஒன்று தென்மாதி மங்கலம் வழியாகவும், இரண்டாவது மாம்பாக்கம் வழியாகவும்,மற்றொரு வழி கடலாடி அருகிலுள்ளது.
மலையேற்ற விரும்பும் ஆன்மீக பக்தர்களுக்கு இந்த கடலாடி வழிதான் மிகவும் விருப்பமானது. இந்த வழியே சுமார் 5
கிலோ மீட்டர் மலைப்பாதை ஆகும் இந்த வழி மிகவும் கடினமானது கடினப்பட்டு இறைவனை தரிசிக்க அவர்கள் விரும்புகின்றனர். இங்கு செல்ல எல்லா நாட்களும் உகந்த நாட்களே மக்கள் இங்கு இங்கு வர பௌர்ணமி நாளை தேர்ந்தெடுக்கின்றனர். முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில்
மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மேலே செல்ல செல்ல அனைத்து பாதைகளும் ஒன்று சேரும் ஒரு இடம் வருகிறது
இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த
கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் சிவன், பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த ஆபத்தான
பாதையில் பெண்களும் சிறுவர்களும் பெரியவர்களும் ஏறுவதைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இங்கு இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இங்குள்ள 6 மலைகளில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.
ஏறும் வழி கடினமாக இருந்தாலும் இறங்கும்போது வேறு வழியில் இறங்கி விடலாம். ஆன்மீக பக்தர்களுக்கும், மலையேற்றம்தை விரும்பும் இளைஞர்களுக்கும் மிகவும் ஏற்ற இடம் கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று பாருங்கள்.

جاري تحميل الاقتراحات...