𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة 1 قراءة Mar 11, 2023
இல்லிக்கல் கல்லு
இல்லிக்கல் கல்லு (Illickal Kallu) என்பது கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் இல்லிக்கல் மலையின் மேல் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இது கோட்டயம் ஊரில் இருந்து 57KM தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,400 அடி உயரத்தில் உள்ளது.இந்த மலைய உச்சியில் இருந்து
பார்த்தால் அரபிக் கடல் தொடுவானத்தின் கீழ் மெல்லிய நீலப்பட்டிழை போல இழையும். பௌர்ணமி நாளில் இங்கிருந்து பார்த்தால் சூரிய அஸ்தமனக் காட்சி கனவுலகமே கண்ணில் தெரிவதுபோலத் தோன்றும். அப்போது முழு நிலா மெல்ல மெல்ல மேலெழும்பி தகதகக்கும். மலையாள திரை உலகில் பல படங்கள் இங்கு தான்
எடுக்கப்பட்டது. இங்கு இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ள காட்சி முனை தான் பிரபலம் அந்த முனைக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். அங்கிருந்து பார்த்தால் ஒரு உடைந்த பாறை பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது இதற்கு செல்ல வாகமண் வழியாகவும் செல்லலாம். அடுத்த முறை நீங்கள்
கேரளா செல்லும் போது கோட்டயம் வழியாகவோ அல்லது வாகமண் சென்றாலோ இங்கு கண்டிப்பாக சென்று பார்க்கவும் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்
maps.app.goo.gl

جاري تحميل الاقتراحات...