𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

24 تغريدة 227 قراءة Mar 11, 2023
கொடைக்கானலில் உள்ள சிறந்த உணவகங்கள்
பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது அங்கு எது நல்ல சுவையான உணவகம் என்று தெரிவதில்லை. போகும் இடத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் சுவை இன்றி சாப்பிட்டுவிட்டு வருவோம் அடுத்த முறை கொடைக்கானலுக்கு சென்றால் இந்த உணவகங்களில் சாப்பிட்டு பாருங்கள்
மண் மணம் உணவகம்
கொடைக்கானலில் நல்ல அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்றால் இந்த உணவகத்திற்கு செல்லலாம். முழுக்க முழுக்க மண்பானை சமையல். பரிமாறுவார்கள் எல்லோருமே பெண்கள் தான். இது வானிலை ஆராய்ச்சி மையம் போகும் வழியில் உள்ளது.
9500924452
maps.app.goo.gl
வெல்கம் உணவகம்
இது சுத்த செட்டிநாடு அசைவ உணவகம்.இங்கு எல்லாமே சுடசுட குளிருக்கு ஏற்றது போல் உள்ளது. ஹோட்டல் சின்னது தான் ஆனால் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும் வெளிப்புறத்தை பார்த்து ஒதுக்க வேண்டாம் இது வில்பட்டி ரோட்டில் உள்ளது
04542242453
maps.app.goo.gl
இம்ரான் பிரியாணி
கொடைக்கானலில் சுவையான பிரியாணிக்கு இங்கு தான் செல்ல வேண்டும் இது லேக் அருகே மேலே உள்ள மார்க்கெட் ரோட்டில் உள்ளது. பிரியாணி மட்டுமில்ல அனைத்து விதமான அசைவ உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.
மஸ்ட் விசிட் உணவகம்
9942152115
maps.app.goo.gl
நியூ இம்ரான் பிரியாணி
இது பழைய இம்ரான் ஹோட்டலில் உறவினர்கள் நடத்தி வருகின்றனர் இது நாயுடு புறத்தில் உள்ளது. அதே சுவை இங்கும் கிடைக்கும்
hotel new imran briyani
099424 78616
maps.app.goo.gl
சஞ்சய் ஹோம் உணவகம்
கொடைக்கானலில் வீட்டுமுறை சமையலுக்கு இந்த ஹோட்டல் பெஸ்ட். மீன் வறுவல் சிக்கன் கிரேவி ரொம்பவும் ருசியாக இருக்கும் விலையும் ரொம்பவே கம்மி குடும்பத்தினருடன் சென்று திருப்தியாக இங்கு சாப்பிடலாம்
Sanjay Home Food
maps.app.goo.gl
காமராஜ் மெஸ்
கம்மி பட்ஜெட்டில் மிகவும் ருசியாக சாப்பிட இங்கு செல்லலாம்.மிகவும் சிறிய கடைதான் ஆனால் சுவை அதிகம். இங்கு சிறப்பு மீன் வருவல் தான்
Kamaraj Mess
093451 92733
maps.app.goo.gl
S மெஸ்
இது ஹோட்டல் கோடை இன்டர்நேஷனல் அவர்களால் நடத்தப்படும் மண்பானை சமையல் ஹோட்டல். விலை சற்று அதிகம் தான் ஆனால் சுவை மிகவும் நன்றாகவே இருக்கும்
g.co
அஸ்டோரியா உணவகம்
கொடைக்கானலில் நம்பர் ஒன் வெஜிடேரியன் உணவகம் இது. இங்கு தங்கும் வசதியும் உண்டு
Hotel Astoria
09842146524
maps.app.goo.gl
ஹில்டாப் உணவகம்
இது ஒரு உயர்தர அசைவ உணவகம். இங்கு பிரியாணியில் இருந்து அனைத்து விதமான உணவுகளும் மிகவும் ருசியாக இருக்கும் விலையும் நியாயமாகவே இருக்கின்றது
maps.app.goo.gl
Ten Degrees உணவகம்
மிகவும் வித்தியாசமான உணவு வகைகளுக்கு இது மிகவும் பொருத்தமான இடம் இட்டாலியன் அமெரிக்கன் உணவு வகைகள் இங்கு சுவையாக இருக்கும்
08056841208
maps.app.goo.gl
கிளவுட் ஸ்ட்ரீட் உணவகம்
இந்த மாதிரி ஒரு உணவகம் சென்னையில் கூட கிடையாது. இட்டாலியன் உணவகம். இங்கு விரகு அடுப்பு பிட்சா ரொம்பவும் பிரபலம் லசான்யா பாஸ்தா போன்ற வகைகளும் அற்புதமான சுவையுடன் கிடைக்கும்
Cloud Street
04542 246 425
maps.app.goo.gl
அரோமாஸ் உணவகம்
இது கொடைக்கானல் பஜார் வீதியில் அமைந்துள்ள உயர்தர அசைவ உணவகம். எல்லாவித உணவு வகைகளும் தனித்துவமான சுவையுடன் இங்கு கிடைக்கும் பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே உள்ளது
Aromas of Kodai
098420 75728
maps.app.goo.gl
Nia's கார்டன் உணவகம்
கொடைக்கானல் ஒரு பூங்கா. அதற்குள் ஒரு பூங்கா ரெஸ்டாரன்ட் என்றால் இதுதான். இயற்கை சூழலோடு உணவருந்துவது ஒரு தனி சுகம் தான் அதற்கு ஏற்ற இடம் இது சுவைகளும் தனித்துவமாக இருக்கின்றன கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று சாப்பிட ஏற்ற இடம்
maps.app.goo.gl
அல்டாப் கஃபே
இது டால்பின் நோஸ் போற வழியில் உள்ளது. இங்கு கிடைக்கும் அரேபியன் உணவுகள் போல் வேறு எங்குமே தமிழ்நாட்டில் சாப்பிட முடியாது. டால்பின் நோஸ் போயிட்டு வந்து கண்டிப்பா இங்கு சாப்பிடுங்கள்
Altaf's Cafe
094871 20846
maps.app.goo.gl
முன்ஜீஸ் உணவகம்
கொடைக்கானல் என்றாலே வெஸ்டர்ன் ஸ்டைல் உணவகங்கள் அதிகம் அதில் ஒன்றுதான் இது இங்கு பீட்சா லிருந்து பர்கர் வரை மிகவும் ஃபேமஸ். இன்டீரியர் டெக்கரேஷன் அற்புதமாக இருக்கும் மிகவும் அமைதியான முறையில் சாப்பிடலாம் இங்கு
Muncheez
04542 240 046
maps.app.goo.gl
ஹோட்டல் பஞ்சாபி
இது கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே உள்ள காம்ப்ளக் மாடியில் உள்ளது. பியூர் பஞ்சாபி ஸ்டைல் உணவகம்.சப்பாத்தி, டால், தந்தூரி சிக்கன் எல்லாம் அருமையாக இருக்கும். விலையும் குறைவுதான். குடும்பத்தினருடன் சென்று திருப்தியாக சாப்பிடலாம்
maps.app.goo.gl
அபிஸ் கஃபே
வட இந்திய உணவு வகைகள் சுவையுடன் கிடைக்கக்கூடிய இடம் இது. மோமோஸ், பிரட் சாண்ட்விச், மற்றும் பல உணவு வகைகள் இங்கு தரமான ருசியுடன் கிடைக்கும்
Aby's Cafe
098429 12398
maps.app.goo.gl
திபெத்தியன் பிரதர்ஸ் உணவகம்.
கொடைக்கானலிலேயே பெஸ்ட் திபெத்தியன் உணவு வகைகள் கிடைக்கும் இடம். இதுவரை நம்ம ஊர் கடைகளில் சாப்பிட்ட நூடுல்சுக்கு மிங்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது கண்டிப்பாக கொடைக்கானல் சென்றால் ட்ரை பண்ணி பாருங்க
04542244838
maps.app.goo.gl
தவா வெஜிடேரியன் உணவகம்
கொடைக்கானலில் மற்றும் ஒரு ருசியான வெஜிடேரியன் உணவகம் என்றால் இதுதான். இங்கு வட இந்திய உணவு வகைகளான ஆலு பரோட்டா, பூந்தி ரைத்தா இவை மிகவும் ருசியாக இருக்கும்.இது கவிஞர் தியாகராஜன் ரோட்டில் அமைந்துள்ளது
g.co
Pastry Corner (Daily Bread)
கொடைக்கானலுக்கு சென்றவர்கள் இந்த பேக்கரிக்கு சென்று வீட்டிற்கு ஏதாவது வாங்கி சென்றால் தான் அந்த பயணம் திருப்தி அடையும் அந்த அளவிற்கு 30 வருடமாக இயங்கி வரும் இந்த பேக்கரி மிகவும் பிரபலமானது.பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் உள்ளது
g.co
The Royal Tibet
கொடைக்கானலில் நல்ல ஒரிஜினல் சைனீஸ் உணவுகள் சாப்பிட இதுதான் ஏற்ற இடம். நூடுல்ஸும் சூப்பும் சேர்ந்த "துப்பா" மிகவும் பிரபலம்.இது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் P.T ரோட்டில் அமைந்துள்ளது
04542 241586
g.co
ஹோட்டல் பாலா
இது கொடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்லும் சாலையில் உள்ளது. இதன் உள்ளே இருந்து பார்த்தால் பூம்பாறை கிராமம் முழுவதும் மிகவும் அழகாக தெரியும் இங்கு பிரியாணி ஸ்பெஷல் மன்னவனூர், கூக்கள், பூம்பாறை காண செல்பவர்கள் இங்கு சாப்பிட்டு பாருங்கள்
g.co
Nias Treats
ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உணவு வகைகளை
ஒரு கட்டு கட்ட இங்கே செல்லலாம். இங்கு விதவிதமான பர்கர் ரொம்பவும் பிரபலம்.
g.co

جاري تحميل الاقتراحات...