𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

6 تغريدة Mar 11, 2023
மியாசாகி மாம்பழம்
உலகிலேயே மிக விலை உயர்ந்த மாம்பழம் வகையைச் சேர்ந்தது இது இன்றைய மதிப்பில் 1 கிலோ மாம்பழம் 3 லட்சம் வரை போகிறது. மற்ற மாம்பழம் போல் மஞ்சள் நிறத்தில் இல்லாமல் இந்த வகை பழங்கள் ரூபி சிவப்பு நிறத்தை கொண்டவை. இதற்கு Taiyo no Tamago என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
அதற்கு `சூரியனின் முட்டை' என்று அர்த்தம். இந்தவகை மாம்பழங்களில் பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை பார்வை குறைபாடுகளை போக்குவதில் சிறந்த பங்குவகிக்கிறது. இதன் சுவையை வேறு எந்த வகை மாம்பழங்களும் கொடுக்க முடியாது என்கிறார்கள்.இந்த மாம்பழம்
அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. 1939-ம் ஆண்டில் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த F.D. இர்வின் என்பவர்தான் இந்த ரகத்தை முதன் முதலில் உருவாக்கினார். அதன் பின்னர் 1985-ம் ஆண்டு வாக்கில்தான் ஜப்பானில் மியாசாகி மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.இப்பொழுதும் ஃப்ளோரிடாவுக்குச் சென்றால் 1 லட்சம்
கொடுத்தே இந்த வகை மாம்பழத்தை வாங்கி விட முடியும்.அப்படி இருந்தும் ஜப்பானில் இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் இது அங்கே விளைவிக்கப்படும் முறைதான். பார்த்துப் பார்த்து செதுக்கியது என்பார்களே அது போல மியாசாகியில் விளையும் மாம்பழங்கள் அனைத்துமே மிகச் சிறப்பான முறையில்
கவனிக்கப்படுகின்றன. மாமரங்கள் பெரும்பாலும் வெட்ட வெளியில்தான் வளர்க்கப்படும்.ஆனால், மியாசாகியில் அப்படிக் கிடையாது. வித்தியாசமாகக் குடில்களுக்குள்ளே வளர்க்கப்படுகின்றன.
இப்போது இந்த மாம்பழங்கள் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. போன
வருடம் இங்கு இருந்து ஒரு மாம்பழம் 21000 ரூபாய்க்கு குஜராத் தொழிலதிபருக்கு விற்கப்பட்டது. இதை ஏன் நம் தமிழக விவசாயிகள் முயற்சி செய்து பார்க்க கூடாது

جاري تحميل الاقتراحات...